மதுரை மேயர் உறவினர் மீது பெட்ரோல் ஊற்றி எரிப்பு... மனைவி வெறிச்செயல்!
மதுரை மேயரின் நெருங்கிய உறவினரும், திமுக நிர்வாகியுமான பொன்விஜய் (48) மனைவியால் பெட்ரோல் ஊற்றி, தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில், 5 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு பரிதாபமாக சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்தவர் பொன் விஜய். திமுக தெற்கு மாவட்ட மீனவரணி நிர்வாகியான இவர் பணம் கொடுக்கல், வாங்கல் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இவரது மனைவி இலக்கியா (37). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.
பொன்விஜய் மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்தின் சகோதரர் ஆவார். பொன்விஜய் செல்போனில் அடிக்கடி வீட்டுக்கு வெளியே சென்று பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனால் சந்தேகமடைந்த இலக்கியா கணவருடன் பொன்விஜய் அடிக்கடி தகராறில் ஈடுபட்டார். சமீபத்தில் உறவினர்கள் இருவரையும் அழைத்து பேசி சமாதானப்படுத்தினர்.
இந்நிலையில் கடந்த மாதம் 30ம் தேதி தம்பதிக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கோபத்தில் இருந்த இலக்கியா 31ம் தேதி காலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொன்விஜய் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்திவிட்டு, வீட்டை விட்டு வெளியேறி சென்றார்.
பொன்விஜய்யின் அலறல் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்தனர். தொடர்ந்து மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் கூடலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து இலக்கியாவை கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர்.
பொன்விஜய்க்கு 70 சதவீதம் தீக்காயம் ஏற்பட்ட தால் தொடர்ந்து அவருக்கு கடந்த 5 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அதன் பின்னர் பொன்விஜய் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டு கூடலூருக்கு கொண்டு செல்லப்பட்டது. பொன்விஜய் உயிரிழந்ததைத் தொடர்ந்து மனைவி இலக்கியா மீதான வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!