அதிர்ச்சி... குழந்தைகளின் பேவரைட் மேகி நூடுல்ஸ் உட்பட நெஸ்ட்லே பொருட்களின் விலை இன்று முதல் உயர்கிறது! சுவிஸ் பொருட்களுக்கு வரி உயர்வு!
இன்று ஜனவரி 1ம் தேதி முதல் குழந்தைகளின் பேவரைட் உணவுப் பொருளான மேகி நூடுல்ஸ் உட்பட நெஸ்லே பொருட்கள், சுவிஸ் தயாரிப்பு சாக்லேட்கள் என சுவிட்சர்லாந்தில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களின் விலை கணிசமாக உயர்கிறது.
நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை சுவிட்சா்லாந்து நாடு நீக்கியதாக அறிவித்ததன் பாதிப்பாக இது உருவாகியுள்ளது. சுவிட்சா்லாந்தைச் சோ்ந்த நெஸ்லே நிறுவனத்திற்கு எதிராக இந்திய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நடவடிக்கை இன்று ஜனவரி 1ம் தேதி 2025 முதல் அமலுக்கு வருவதாக சுவிட்சா்லாந்து நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இது இந்தியாவில் சுவிஸ் முதலீடுகளை பாதிக்கலாம் மற்றும் சுவிட்சர்லாந்தில் செயல்படும் இந்திய நிறுவனங்களுக்கு வரிகளை உயர்த்தப்பட்டுள்ளது.
இதுநாள் வரை இந்தியாவுக்கு அளிக்கப்பட்டு வந்த ‘விருப்பத்துக்குரிய நட்பு நாடு’ என்ற அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு வருவதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இருநாடுகளுக்கு இடையேயான வரி தொடா்பான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அந்நாட்டு நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், ஐரோப்பிய யூனியன் நாடுகளில் செயல்படும் இந்திய நிறுவனங்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். இன்று ஜனவரி 1 ம் தேதி முதல் சுவிட்சர்லாந்தில் இந்திய நிறுவனங்களின் ஈவுத்தொகைக்கு 10% வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து Nangia Andersen M&A வரி பங்குதாரர் சந்தீப் ஜுன்ஜுன்வாலா ”இன்றைய உலகளாவிய சூழலில் சர்வதேச வரி ஒப்பந்தங்களை நிர்வகிப்பதில் உள்ள சவால்களை எடுத்துக்காட்டி, சுவிட்சர்லாந்தில் உள்ள இந்திய நிறுவனங்கள் அதிகரித்த வரிக் கடமைகளை எதிர்கொள்ளக் கூடும்” என தெரிவித்துள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!