மகா கும்பமேளாவின் செலவு 7,500 கோடியாம்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

 
 மகா கும்பமேளா

 உத்தரபிரதேசத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நடத்தப்படுகிறது. கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி ஆகிய நான்கு நதிகளின் கரையில் அமைந்துள்ள புனித தலங்களில் கும்பமேளா நடைபெறும். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நடைபெறும் கும்பமேளாவில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று புனித நீராடுவார்கள்.

12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு ஜனவரியில் கும்பமேளா தொடங்க உள்ளது. இதில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை உத்தரபிரதேச அரசு செய்து வருகிறது. இந்நிலையில் கும்பமேளா செலவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

1882 ஆம் ஆண்டு நடைபெற்ற மகா கும்பமேளாவில் சுமார் 8 லட்சம் பக்தர்கள் நீராடியதாகவும், அப்போது நாட்டின் மக்கள் தொகை 22.5 கோடியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த ஆண்டு கும்பமேளாவுக்கு 20,288 செலவிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தொகையின் தற்போதைய மதிப்பு 3.6 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

இதையடுத்து, 1894ல், 10 லட்சம் பேர் பங்கேற்ற போது, ​​69,427 ரூபாய் செலவிடப்பட்டது தெரியவந்துள்ளது. 1906ல் நடந்த கும்பமேளாவில் 25 லட்சம் பேர் கலந்து கொண்டனர். அப்போது ரூ.90 ஆயிரம் செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 1918ல் நடந்த கும்பமேளாவில் 30 லட்சம் பேர் கலந்து கொண்டதாகவும் அப்போது ரூ.1.4 லட்சம் செலவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள கும்பமேளாவில் 40 கோடி பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது. இதை ஏற்பாடு செய்ய ரூ.7,500 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web