மகா கும்பமேளா.. புனித நீராடினார் பூட்டான் மன்னர்!

உத்தரபிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26 ஆம் தேதி வரை 45 நாள் மகா கும்பமேளா பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதற்காக, 10,000 ஏக்கர் பரப்பளவில் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்துமிட வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15,000 துப்புரவு பணியாளர்கள், 25,000 தொழிலாளர்கள் மற்றும் 24 மணி நேர கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றை அரசு அமைத்துள்ளது.
இதுவரை, 34.97 கோடிக்கும் அதிகமானோர் இந்த கும்பமேளாவைப் பார்வையிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். இந்த சூழலில், பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக் இன்று பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். புனித நீராடுவதற்கு முன், சூரியனுக்கு `ஆர்க்யா' வழங்குவது போன்ற சடங்குகளைச் செய்தார்.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அமைச்சர்கள் சுதந்திர தேவ் சிங் மற்றும் நந்த கோபால் குப்தா ஆகியோரும் அவருடன் புனித நீராடினர். முன்னதாக, நேற்று, பூட்டானில் இருந்து லக்னோ விமான நிலையத்திற்கு வந்த பூட்டான் மன்னர் ஜிக்மே நெசர் நம்க்யால் வாங்சக்கை, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார். பூட்டான் மன்னரை பாரம்பரிய இசை மற்றும் நடனத்துடன் வரவேற்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!