மகாளய அமாவாசை | இன்று முதல் சதுரகிரியில் மலையேறி தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி!

 
சதுரகிரி

புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் மகாளய அமாவாசை வழிபாடுகள் நடைபெற உள்ள நிலையில், இன்று முதல் சதுரகிரி மலையேறி சென்று தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில். இந்த ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி மற்றும் பிரதோஷ நாட்களில் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.  

இன்று முதல் சதுரகிரி மலையேற அனுமதி! CONDITIONS APPLY!

இந்நிலையில், இம்மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை தினங்களையொட்டி இன்று செப்டம்பர் 30ம் தேதி முதல் அக்டோபர் 3ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்களுக்கு தினமும் காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பக்தர்கள் சதுரகிரி மலை ஏறி சாமி தரிசனம் செய்ய வனத்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் அனுமதி வழங்கியுள்ளது. இந்த நாட்களில் நடைபெறும்  சிறப்பு வழிபாடுகளில்  கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சதுரகிரி

மலையேற அனுமதிக்கப்பட்ட நாட்களில் திடீரென கனமழை பெய்தால், பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படும். அதே போன்று பக்தர்கள் இரவில் மலை மீது தங்குவதற்கு அனுமதி கிடையாது. தடை செய்யப்பட்ட, எளிதில் தீப்பிடிக்கும் வகையிலான பொருட்களை மலை மீது கொண்டு செல்லக்கூடாது என்பது உட்பட  பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web