உலகக் கோப்பை வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு மகாராஷ்டிர அரசு பரிசு!
மகளிர் உலகக் கோப்பை வெற்றியைக் கைப்பற்றிய இந்திய அணியில் இடம்பெற்ற மும்பை வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரொட்ரிக்ஸ், ராதா யாதவுக்கு தலா ரூ.2.25 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் அறிவித்துள்ளார்.

அதேபோல், அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த மும்பையைச் சேர்ந்த அமோல் மஜும்தாருக்கு ரூ.22.5 லட்சம் பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா – இலங்கை இணைந்து நடத்திய உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இறுதியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதல்முறையாக கோப்பையை வென்றது.

இந்த சாதனையை முன்னிட்டு மகாராஷ்டிர அரசு மாநில வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளருக்கு பாராட்டு பரிசை அறிவித்ததுடன், அமைச்சரவை கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக வாழ்த்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. மேலும், அணியினர் மும்பைக்கு வரும்போது அவர்களுக்கு சிறப்பு பாராட்டு விழா நடத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
