’சமூக நல்லிணக்கத்தை பேணியவர்’.. தேவர் குருபூஜைக்கு தவெக தலைவர் விஜய் ட்வீட்!

 
விஜய்

முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். 'தமிழக வெற்றிக் கழகம்' கட்சியை ஆரம்பித்து, அதன் முதல் மாநாட்டை நடத்திய விஜய், தீவிர அரசியலில் இறங்கி, இன்று முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் அவரை நினைவு கூர்ந்தார்.


இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தளத்தில், "அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார். இந்திய விடுதலைக்காகப் பாடுபட்டவர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ராணுவத்துக்கு ஆதரவளித்தவர். நாடாளுமன்ற, சட்டமன்ற அரசியலில் தடம் பதித்த சொற்பொழிவாளர். சமூக நல்லிணக்கத்தைக் கடைப்பிடித்தார். தமிழக அரசியலின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்த ஒரு மாமனிதர் திருநாளில் அவரை வணங்கி வாழ்த்துவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

விஜய் தவெக மாநாடு

இதுவரை அண்ணா, பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் பிறந்தநாளுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும், காமராஜ், பெரியார், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலி அம்மாள் ஆகியோரை கொள்கை தலைவர்களாக அறிவித்து, மாநாட்டில் பூலித்தேவர், ஒண்டிவீரன், அழகுமுத்து கோன், மருது சகோதரர்கள், முத்தரையர் உள்ளிட்ட போராட்டக்காரர்களுக்கு மரியாதை செலுத்தினார். இதையடுத்து தற்போது முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜைக்காக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web