மழை நேரத்தில் சுடச்சுட வெங்காய போண்டா செய்து சாப்பிடுங்க!!

மழை நேரத்தில் சுடச்சுட வெங்காய போண்டா செய்து சாப்பிடுங்க!!

தொடர்ந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நேரத்தில் சூடான காபி, டீயுடன் வெங்காய போண்டா சாப்பிட அருமையாக இருக்கும். இதை 10 நிமிடங்களில் செய்து விடலாம்.

மழை நேரத்தில் சுடச்சுட வெங்காய போண்டா செய்து சாப்பிடுங்க!!

தேவையான பொருட்கள்

கடலை மாவு – 200கி
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2
சீரகம் – 1 டீஸ்பூன்

மிளகாய்தூள் – 1 டீஸ்பூன்
கோதுமை மாவு – 4டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

மழை நேரத்தில் சுடச்சுட வெங்காய போண்டா செய்து சாப்பிடுங்க!!

செய்முறை

வெங்காயத்தை நீளமாக மெல்லியதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சீரகம், மிளகாய்த்தூள், கோதுமை மாவு, உப்பு, வெங்காயம் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பிசைய வேண்டும்.

மாவு உருண்டை பிடிக்கும் பக்குவத்தில் இருக்க வேண்டும்.
மிதமான தீயில் எண்ணெய் சூடானதும் மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி போட்டு இருபுறமும் பொன்னிறமாக நன்கு வேகவைத்து எடுக்க வேண்டும்.
சுவையான வெங்காய போண்டா நிமிடங்களில் தயார்

From around the web