பிரதீப்புடன் இணையும் மமிதா பைஜு?

திரையுலகில் தற்போது பிரதீப் ரங்கநாதன் காட்டில் சான்ஸ் கதவை தட்டி வருகிறது. ‘லவ் டுடே’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘டிராகன்’, ‘லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி’ படங்களில் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், இயக்குநர் சுதா கொங்குராவிடம் உதவி இயக்குநராக இருந்த கீர்த்தீஸ்வரன் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தயாரிக்கும் மைத்ரி மூவிஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
'பிரேமலு’ மலையாளப் படத்தின் மூலம் பிரபலமான இவர், தமிழில் ஏற்கனவே ‘ரெபல்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!