போலீசாரை கத்தியால் தாக்கி சென்றவர் அதிரடியாக கைது.. மாவு கட்டுடன் மருத்துவமனையில் அனுமதி!
காட்டுமன்னார்கோவில் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸார், கையை கத்தியால் கீறி தப்பிச் சென்ற நிலையில் கை உடைந்த நிலையில் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள குமராட்சி காவல் நிலைய தலைமை காவலர் ஜெயராமன், முதுநிலை காவலர் தேவநாதன் ஆகியோர் நேற்று இரவு ஒரு மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி விசாரித்தபோது, அவர் குடிபோதையில் இருந்தது தெரிந்தது. அவரிடம் விசாரணை நடத்தியபோது, அந்த நபர் தான் வைத்திருந்த பேனா கத்தியால் காவலர்கள் இருவரையும் கையில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதையடுத்து 2 காவலர்களும் சிதம்பரம் அரசு ராஜா முத்தையா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டு உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் டெல்டா பிரிவு போலீசார் இருசக்கர வாகன பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
அதில், புதுச்சேரி வில்லியனூரைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் விஸ்வநாதன், காவலர்களை கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோடியது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்ய முயன்றபோது, அங்கிருந்து ஓடிய அவர், பின்னர் போலீசாரிடம் சிக்கினார். இந்த சம்பவத்தில் விஸ்வநாதனுக்கு கீழே விழுந்ததில் கை உடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை கைது செய்து கடலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!