மேன் VS வைல்ட் ! ரஜினிக்கு அடுத்த சினிமா பிரபலம் இவர் தான்!

 
மேன் VS வைல்ட் ! ரஜினிக்கு அடுத்த சினிமா பிரபலம் இவர் தான்!


டிஸ்கவரி சேனலில் பெரும்பாலான ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வரும் நிகழ்ச்சி மேன் VS வைல்ட் . இந்நிகழ்ச்சியை டிஸ்கவரி தொலைக்காட்சியில் பியர் கிசில்ஸ் தொகுத்து வழங்கி வருகிறார். இதில் பல தத்ரூபமான காட்சிகள் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் இடம்பெறும் என்பது இதன் சிறப்பு.


மனிதனுக்கும் காட்டுக்கும் இடையில் உள்ள புரிதல் காரணமாகவே அப்படி அமைந்துள்ளதாக இந்நிகழ்ச்சியை விரும்பி பார்க்கும் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை கூறி வருகின்றனர். இதில் பியர் கிசில்ஸ் உடன் சமூக, சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டு காட்டில் பயணம் செய்துள்ளனர்.

மேன் VS வைல்ட் ! ரஜினிக்கு அடுத்த சினிமா பிரபலம் இவர் தான்!

சமீபத்தில் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றதில் பிரதமர் மோடி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபல பாலிவுட் நடிகர் அக்க்ஷய் குமார் நிகழ்ச்சிகள் குறிப்பிடத்தக்கவை.விதவிதமான விலங்குகள், பறவைகள், பாம்பு வகைகள் ஆகியவற்றுடன் பிரபலங்கள் இணைந்து பயணம் செய்யும் இந்நிகழ்ச்சி ஆச்சர்யத்துடன் அவ்வப்போது திகிலையும் கலந்து கொடுக்கும்.

மேன் VS வைல்ட் ! ரஜினிக்கு அடுத்த சினிமா பிரபலம் இவர் தான்!

அந்த வகையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இதற்கான படப்பிடிப்பு மாலத்தீவில் நடத்தப்பட்டதாகவும், விரைவில் இந்நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web