தங்கம் வென்ற கார்த்திகாவுக்கு ரூ.10 கோடி பரிசுத்தொகை வழங்க வேண்டும் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்!

 
கபடி கார்த்திகா

ஆசிய இளையோர் கபடி போட்டியின் இறுதிப் போட்டியில், இந்திய அணி ஈரானை 75–21 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. இந்த அசாதாரண வெற்றியில் முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவராக தமிழகத்தைச் சேர்ந்த கார்த்திகாவும் இடம் பெற்றுள்ளார்.

கார்த்திகா

கார்த்திகாவின் சாதனையை பாராட்டும் விதமாக தமிழக அரசு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்தது. அதேபோல, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அதிமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கினார். இதைத் தொடர்ந்து பல அரசியல் தலைவர்கள், விளையாட்டு பிரபலங்கள், மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் கார்த்திகாவை நேரில் சந்தித்து பாராட்டி வருகின்றனர்.

கார்த்திகா

இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் தனது சமூக ஊடகப் பதிவில், “இந்தியா பெருமையாக திகழும் இளம் வீராங்கனை கார்த்திகாவுக்கு தமிழக அரசு ரூ.10 கோடி பரிசுத்தொகையும், அரசு வீடும் வழங்க வேண்டும். மாநில அளவில் மட்டுமல்லாது, தேசிய அளவிலும் இவரைப் போன்ற திறமையாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார். கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகா தற்போது தமிழக இளையோர் விளையாட்டு வீராங்கனைகளுக்கு ஒரு முன்மாதிரியாக மாறியுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?