85 நாடுகள் கலந்து கொண்ட கடல்சார் மாநாடு... அமித்ஷா தலைமையில் உலகளாவிய கவனம்!

 
அமித்ஷா

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் அமைச்சகம் சார்பில் ‘இந்திய கடல்சார் வாரம் – 2025’ என்ற சர்வதேச மாநாடு மும்பையில் இன்று தொடங்கியது. கோரேகான் பம்பாய் வர்த்தக கண்காட்சி அரங்கில் நடைபெறும் இந்த மாநாடு அக்டோபர் 31 வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. மாநாட்டை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார். மத்திய துறைமுகங்கள் மற்றும் நீர்வழிப்பாதை மந்திரி சர்பானந்த சோனோவால், மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேல், ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஞ்ஜி, கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

நார்வே, நெதர்லாந்து, டென்மார்க், சுவீடன் போன்ற நாடுகள் இணைந்து நடத்தும் இந்த மாநாட்டில் உலகளாவிய கடல்சார் வளர்ச்சி, வர்த்தக வாய்ப்புகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்து 350க்கும் மேற்பட்ட நிபுணர்கள் பங்கேற்று உரையாற்றுகின்றனர். இந்திய துறைமுகங்கள் கூட்டமைப்புத் தலைவர் சுனில் பாலிவால் கூறுகையில், “85 நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் வரவிருக்கின்றனர். 500க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான 600 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன” என்றார்.

மாநாட்டின் தொடக்க விழாவில் அமித்ஷா பேசியதாவது, “இந்தியாவுக்கு ஜனநாயக ஸ்திரத்தன்மையும் கடற்படை திறன்களும் உள்ளன. ‘கிரேட் நிக்கோபார் திட்டம்’ நமது கடல்சார் வர்த்தகத்தை பல மடங்கு உயர்த்தும். மும்பைக்கு அருகே ரூ.10 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் கட்டப்படும் ‘வாதவன்’ துறைமுகம் உலகின் தலைசிறந்த துறைமுகங்களில் ஒன்றாக மாறும். கடல்சார் துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் இந்தியாவை உலகளாவிய கடல்சார் சக்தியாக மாற்றுகின்றன” என தெரிவித்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!