சூப்பர்.... திருமணத்தை வீட்டிலிருந்தே பதிவு செய்யலாம்... தமிழக அரசு அதிரடி!

 
திருமணம்

 தமிழகத்தில்  2009 முதல்  திருமணங்களை பதிவு செய்யும் நடைமுறை வழக்கத்தில் இருந்து வருகிறது. திருமணங்களை முறையாக பதிவு செய்யும் பத்திரப்பதிவு சட்டம் நடைமுறையில் இருந்து வரும்  நிலையில் இதற்காக பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டியிருந்தது.   2020  ல்  தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்தின்படி திருமணத்தை அந்தந்த பகுதிகளில் உள்ள பதிவாளர் அலுவலகங்களில் கூட பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் திருமணங்களை பதிவு செய்பவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் மிகவும் குறைவாகவே இருக்கிறது.  

5வது திருமணம்

குறிப்பாக பாஸ்போர்ட் பெற விரும்புபவர்கள் மற்றும் காதல் திருமணம் செய்பவர்கள் மட்டும்தான் திருமணத்தை பதிவு செய்து கொள்கின்றனர்ன். இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் திருமணத்தை பதிவு செய்வதில் ஏராளமான சிக்கல்களை சந்தித்து வருவதால் அதனை  எளிதாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.அதன்படி ஆன்லைனில் திருமணத்தை பதிவு செய்யும் நடைமுறையை தமிழக அரசு கொண்டுவர திட்டமிட்டு இருப்பதாக  புதிய தகவல் வெளிவந்துள்ளது.

திருமணம்

இதில் திருமணத்தை பதிவு செய்ய ரூ 100 கட்டணமும் ஆன்லைனில் பதிவு செய்ய ரூ100 கட்டணமும் என மொத்தம் 200 ரூபாய் செலுத்தினால் போதும். இதன் மூலம் தம்பதிகள் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு நேரடியாக செல்ல வேண்டியது இல்லை.  அருகில் உள்ள ஆன்லைன் சென்டர்களில்  திருமணத்தை பதிவு செய்து கொள்ளலாம். இல்லையெனில் அதற்குரிய இணையதளத்தில் வீட்டில் இருந்தபடியே கூட திருமணத்தை பதிவு செய்யலாம். மேலும் இந்த புதிய நடைமுறை தற்போது சோதனையில் இருந்து வருவதாகவும் விரைவில் நடைமுறைக்கு வரும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web