நடக்காத கல்யாணத்துக்கு திருமண பதிவு.. பள்ளி மாணவியை ஏமாற்றிய ஆசிரியர்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 
உயர்நீதிமன்ற மதுரை கிளை

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் போது, ​​பள்ளியில் வகுப்பு ஆசிரியராக இருந்த ஆசிரியர், மாணவர்களிடம் ஹீரோவாக காட்சியளித்து, அவ்வப்போது நகைச்சுவையாக பேசி வந்தார்.

திருமணம்

ஒரு நிகழ்ச்சிக்காக என்னை சென்னைக்கு அழைத்துச் சென்றார். அப்போது, ​​எனக்கு தெரியாமல், சென்னை அம்பத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டதாகவும், சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமண பதிவு சான்றிதழ் பெற்றதாகவும் கூறினார். இந்த திருமண பதிவு மற்றும் புகைப்படங்களை காட்டி ஆசிரியர் மிரட்டியுள்ளார். இதுகுறித்து பெற்றோரிடம் கூறியதால், ராமநாதபுரம் மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியர் மீது புகார் அளிக்கப்பட்டு, போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், திருமணம் நடக்காமலையே எனக்கும், ஆசிரியருக்கும் திருமணம் முடிந்து, அம்பத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில், ஒரு சிலரின் உதவியுடன், திருமணத்தை பதிவு செய்தனர். இதனால் எனது எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, போலி திருமண பதிவு சான்றிதழை ரத்து செய்ய வேண்டும்,'' என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சௌந்தர் முன்பூ முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, ​​ஆசிரியர் நேரில் ஆஜரானார். நேரில் ஆஜரான ஆசிரியர், மாணவி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வரவில்லை என்றும், எங்களுக்கு திருமணம் ஆகவில்லை என்றும் தெரிவித்தார்.

சிறுமி வன்கொடுமை வழக்கில் ஒரேநாளில் நீதிமன்றம் தீர்ப்பு..!!

அதை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, திருமணம் நடக்காத நிலையில் மாணவியிடம் திருமணம் பதிவு செய்தது தவறு. மேலும், தங்களுக்கு திருமணம் ஆகவில்லை என்றும் ஆசிரியர் கோர்ட்டில் ஒப்புக்கொண்டார். மேலும், இந்தத் திருமணப் பதிவுச் சான்றிதழை ரத்து செய்ய எதிர்ப்புத் தெரிவிக்காததால், திருமணப் பதிவை ரத்து செய்து, வழக்கை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web