கிருஷ்ணர் சிலையுடன் திருமணம்... அதீத பக்தியால் விநோத முடிவெடுத்த இளம்பெண்!
விநோதமான திருமண முயற்சிகள் உலகில் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் கிருஷ்ணர் மீது கொண்ட அதீத பக்தியால், உறவினர்கள் முன்னிலையில் கிருஷ்ணரின் சிலையையே திருமணம் செய்து கொண்ட சம்பவம் கவனம் பெற்றுள்ளது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிங்கி (28) என்ற பெண், கிருஷ்ணர் மீது தீவிர பக்தி கொண்டவர். அண்மையில் கிருஷ்ணர் கோவிலுக்குச் சென்ற போது, தான் அணிந்திருந்த தங்க மோதிரம் சிலை மீது விழுந்ததாகவும், தனக்குக் காய்ச்சல் வந்த போதுக் கிருஷ்ணருக்குப் பூஜை செய்தவுடன் குணமாகி விட்டதாகவும் கூறுகிறார். இந்தச் சம்பவங்கள் யாவும், கிருஷ்ணர் கொடுத்த அறிகுறிகள் எனப் பிங்கி உறுதியாக நம்பியுள்ளார்.

இந்த அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாகவே, அவர் உறவினர்கள் முன்னிலையில் கிருஷ்ணரின் சிலையைத் திருமணம் செய்து கொள்ளும் விநோத முடிவை எடுத்ததாகத் தெரிவித்துள்ளார். ஆன்லைனில் திருமணம், பொம்மையுடன் திருமணம், தன்னைத்தானே திருமணம் எனப் பல்வேறு விநோதச் சம்பவங்கள் நடக்கும் வரிசையில், தற்போது இந்தச் சிலைத் திருமணச் சம்பவமும் பேசுபொருளாகியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
