மார்க்சிஸ்ட், எஸ்டிபிஐ கட்சியினர் மோதல்... வாகனங்களுக்கு தீவைத்து பதற்றம்

 
தீ வைப்பு
 

கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டம் நடுமங்காடு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் எஸ்டிபிஐ (இந்திய சமூக ஜனநாயக கட்சி) கட்சியினருக்கும் இடையே நேற்று கடும் மோதல் ஏற்பட்டது. எஸ்டிபிஐ உறுப்பினர்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் நடுமங்காடு நிர்வாகியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இரு கட்சிகளின் ஆதரவாளர்கள் இடையே மோதல் தீவிரமடைந்தது.

இரவு நேரத்தில் ஏற்பட்ட பதற்றத்தில், எஸ்டிபிஐ கட்சியினரால் இயக்கப்பட்ட ஆம்புலன்சுகளுக்கு தீ வைக்கப்பட்டதுடன், சிலர் வீடுகள் மற்றும் வாகனங்கள் மீது கல் வீச்சும் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பல கார்களும் சேதமடைந்தன.

மோதலால் நடுமங்காடு முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. சம்பவத்தையடுத்து போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு, இரு தரப்பினரிடையேயான மோதல் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!