உலகப்புகழ் பெற்ற ஈபிள் டவரில் பயங்கர தீ விபத்து.. அலறியடித்து ஓடிய சுற்றுலா பயணிகள்!

 
 ஈபிள் டவர்

உலகப் புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ளது. கிறிஸ்துமஸ் தினம் நாளை கொண்டாடப்பட உள்ளதால் ஈபிள் டவர் பகுதியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இந்நிலையில் ஈபிள் டவரில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஈபிள் டவரில் உள்ள லிஃப்டில் தீ விபத்து ஏற்பட்டது.

முதல் மற்றும் இரண்டாவது தளத்திற்கு இடையே உள்ள லிஃப்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புப் படையினர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து காரணமாக ஈபிள் டவர் பகுதியில் திரண்டிருந்த 12,000 சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டனர்.

மேலும், ஈபிள் டவர் பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஈபிள் டவர் பகுதியில் திரண்டிருந்த சுற்றுலா பயணிகள் தீ விபத்தால் கவலையடைந்துள்ளனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web