இஸ்ரேல் பிரதமரை கண்டித்து பெரும் போராட்டம்.. தலைநகரில் குவிந்த பொதுமக்கள்!
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு கடந்த வாரம் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, ஜெருசலேமில் உள்ள ஹடாசா மருத்துவ மையத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு சிறுநீர் பாதையில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, நெதன்யாகுவுக்கு இன்று புரோஸ்டேட் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், நெதன்யாகு குடலிறக்க அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
இஸ்ரேலின் பாலஸ்தீன ஆக்கிரமிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் ஆபரேஷன் அல் அக்ஸா மூலம் அந்நாட்டில் திடீர் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 250 பேர் வரை சிறைபிடிக்கப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த 13 மாதங்களாக காசா உள்ளிட்ட பாலஸ்தீன நகரங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி 45,000க்கும் மேற்பட்ட மக்களை கொன்று குவித்தது.
100,000க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். 100 வரையிலான இஸ்ரேலிய கைதிகள் இன்னும் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், காஸாவில் ஹமாஸிடம் எஞ்சியிருக்கும் பணயக்கைதிகளை திருப்பி அனுப்ப இஸ்ரேலிய அரசாங்கம் உடன்பாட்டை எட்ட வேண்டும் என்று கோரி தலைநகர் டெல் அவிவில் நெதன்யாகுவுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தினர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!