ஆண் ஆசிரியருக்கு மகப்பேறு விடுமுறை.. வெளியான ஸ்கிரீன்ஷாட்டில் அதிர்ந்த பள்ளிக்கல்வித்துறை!

 
 பள்ளி ஆசிரியர்

ஜிதேந்திர குமார் சிங் பீகார் மாநிலம் ஹாஜிபூர் தொகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வந்தார். தற்போது அவர் விடுப்பில் இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில், பீகார் அரசு பள்ளி ஆசிரியர்கள் விடுப்புக் கோரிக்கைகளை சமர்ப்பிக்கும் இ-ஷிக்ஷா கோஷ் என்ற இணையதளத்தில் ஜிதேந்திர குமார் விடுப்பு எடுத்த ஸ்கிரீன் ஷாட்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆசிரியர்

காரணம் அந்த பதிவில் ஜிதேந்திர குமார் சிங் தற்போது மகப்பேறு விடுப்பில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண் ஆசிரியருக்கு மகப்பேறு விடுப்பு எப்படி வழங்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளதுடன், பீகார் கல்வித்துறை மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பான ஸ்கிரீன் ஷாட் வெளியாகி வைரலானதால், இதுகுறித்து அப்பகுதி கல்வி அலுவலர் அர்ச்சனா குமாரி விளக்கம் அளித்துள்ளார். அதில், “ஜிதேந்திர குமார் சிங்கின் பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. இது விரைவில் சரி செய்யப்படும்,'' என்றார்.

மேலும், “தொழில்நுட்பக் கோளாறால் இந்த தவறு நிகழ்ந்துள்ளது. ஆசிரியர் விடுப்பு தகுதியின்மை பிரிவின் கீழ் குறிக்கப்பட்டுள்ளது. சில பெண் ஆசிரியர்கள் விண்ணப்பித்த CLகள் EL களாக காட்டப்படுகின்றன. இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆண் ஆசிரியர்களுக்கும் 15 நாட்கள் விடுமுறை உண்டு. ஆனால் அது ஒரு தனி பிரிவின் கீழ் உள்ளது,” என்றார்.

பீகாரில், புதிதாகப் பிறந்த குழந்தைகளைப் பராமரிக்க ஆண்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதற்கு ஜிதேந்தர் விண்ணப்பித்திருந்ததாகவும், தொழில்நுட்பக் கோளாறால் மகப்பேறு விடுப்பு என தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பள்ளிகளில் ஆய்வு நடத்துவதில் அலட்சியம் காட்டப்படுகிறது என்று கடந்த மாதம்தான் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளையும் பள்ளிக் கல்வித்துறை எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றும் எச்சரிக்கை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web