எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாக நடந்த பயங்கர மோசடி.. லட்சக்கணக்கில் அமுக்கிய நபர் கைது!
சென்னை காவல் ஆணையரிடம் ஒருவர் புகார் அளித்துள்ளார். அதாவது, “ஆன்லைன் சேவை நடத்தி வந்த நெல்லூரைச் சேர்ந்த வடலப்பள்ளி விஜயகுமார், தனது மகளுக்கு பாண்டிச்சேரி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாகக் கூறி 2021 ஆம் ஆண்டு ரூ.71.63 லட்சம் பெற்றார். ஆனால், அந்த சீட் கிடைக்காமல் ஏமாற்றினார்” என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.
புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில், வடலப்பள்ளியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் ஏமாற்றியது தெரியவந்தது. நெல்லூர் வேதபாளையம் காவல் நிலையம் மற்றும் தர்காமிட்டா காவல் நிலையத்திலும் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன, ஆனால் விஜயகுமார் தலைமறைவாகிவிட்டார்.
இதைத் தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு காவல் துணை ஆணையர் கீதாஞ்சலி மேற்பார்வையில் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து, ஆந்திராவின் ஓங்கேலில் விஜயகுமாரை போலீசார் கடந்த 7 ஆம் தேதி கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்தனர். இந்நிலையில், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சீட் வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்து நடத்தப்படும் இதுபோன்ற மோசடிகளில் சிக்கிக் கொள்ளாமல், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் அறிவுறுத்தியுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!