இறைச்சி கடை உரிமையாளர் வீட்டில் கைவரிசை.. 50 சவரன் தங்கம், ரூ.26 லட்சம் ரொக்கம் அபேஸ்.. சிக்கிய 4 பேர்!

 
கோவில்பட்டி கொள்ளை

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, முகமது சாலியாபுரம் 1வது தெருவைச் சேர்ந்தவர் முகமது சையத் சுலைமான் (50). இவர் இறைச்சி கடை நடத்தி வருகிறார். ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்கி விற்பனை செய்து வருகிறார். முகமது சையத் சுலைமானுக்கு அந்த தெருவில் எதிரெதிரே 2 வீடுகள், ஒரு பழைய வீடு மற்றும் ஒரு புதிய வீடு உள்ளது. கடந்த 8ம் தேதி இரவு, முகமது சையத் சுலைமான் புதிய வீட்டில் சாப்பிட்டுவிட்டு, எதிரே உள்ள பழைய வீட்டில் தனது குடும்பத்தினருடன் தூங்கினார். இந்த நிலையில், மறுநாள் (9ம் தேதி) காலை, எழுந்து புதிய வீட்டிற்குச் சென்றபோது, ​​வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 50 பவுன் நகைகள் மற்றும் ரூ.26 லட்சம் ரொக்கம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இவற்றின் மொத்த மதிப்பு ரூ.51 லட்சம். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று கோவில்பட்டி அருகே போலீசார் வாகன சோதனை நடத்தி வந்தனர். அப்போது, ​​சந்தேகத்திற்கிடமான முறையில் பைக்கில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த சரத்குமார் (24), காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அக்பர் அலி என்கிற அபுபக்கர் (23) என்பதும், கோவில்பட்டியில் உள்ள முகமது சையத் சுலைமான் வீட்டில் பணம் மற்றும் நகைகளைத் திருடியவர்கள் என்பதும் தெரியவந்தது.

கைது

மேலும், அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், ராஜபாளையம் அருகே உள்ள தென்னந்தோப்பில் பதுங்கியிருந்த கணேஷ் ராஜ் என்கிற ஜக்கு கணேஷ் (20), சக்திகணேஷ் (24) ஆகியோரைப் பிடித்து விசாரணைக்காக கிழக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அதன் பிறகு, சரத்குமார் உட்பட 4 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 45 பவுன் நகைகள் மற்றும் ரூ.4 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், 4 பேரையும் கோவில்பட்டி ஜே.எம்.1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web