விசைப்படகு மீனவா்கள் 2வது நாளாக வேலைநிறுத்தம்!
தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகு மீனவா்கள் தினசரி பணி வழங்க வலியுறுத்தி நேற்று 2வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றன. இவா்கள் காலை 5 மணிக்கு சென்று, இரவு 9 மணிக்குள் கரைக்கு வந்து விடுவா். இதன் காரணமாக, ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, விசைப்படகு உரிமையாளா்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் படகுகள் கடலுக்குள் செல்ல வேண்டும் என்று அவா்களுக்குள் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி சென்று வந்தனா். ஆனாலும் மீன்பாடு அதிகம் இல்லாததால் தினசரி குறைந்த அளவு விசைப்படகுகள் கடலுக்கு சென்று வந்தன.
இந்நிலையில், தினசரி பணி வழங்கக் கோரி விசைப்படகு மீனவா்கள் வேலைநிறுத்தத்தை திங்கள்கிழமை தொடங்கினா். இப்போராட்டம் 2வது நாளாக நேற்றும் நீடித்தது. குறிப்பிடத்தக்கது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!