மருத்துவ நிறுவன தலைவர் கொலை வழக்கில் திடீர் டிவிஸ்ட்.. விசாரணை ஒத்திவைப்பு!

 
 பிரையன் தாம்சன்

அமெரிக்காவில் யுனைடெட் ஹெல்த்கேர் என்ற மருத்துவ நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்தின் சிஇஓ பிரையன் தாம்சன் (50) டிசம்பர் 4ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.இதுகுறித்து, டிச.10ம் தேதி பென்சில்வேனியாவில் உள்ள மெக்டொனால்டு கடையில் பொறியியல் பட்டதாரியான லூய்கி மங்கியோனை (26) போலீசார் கைது செய்தனர்.

3டி பிரிண்டர் மூலம் வீட்டில் துப்பாக்கியை தயாரித்து கொலை செய்ய பயன்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர். யுனைடெட் ஹெல்த்கேர் உள்ளிட்ட நிறுவனங்களின் அணுகுமுறை மக்களின் வாழ்க்கையை பணமாக பார்ப்பதால் மக்கள் மத்தியில் கோபம் ஏற்பட்டது. இதனால் மங்கியோனுக்கு ஆதரவாக பலர் குரல் எழுப்பினர். இந்நிலையில், இந்த கொலையை தான் செய்யவில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் அவர் மீது கொலை உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த இளைஞருக்கு ஆதரவாக ஒரு பெண் வாதிட்டார். அதிகாரிகள் தனது வாடிக்கையாளரை மனித பிங்-பாங் பந்தைப் போல நடத்துகிறார்கள் என்று அவர் கூறினார். அப்போது மாங்கன் கொலையை செய்யவில்லை என்றார். வழக்கு பிப்ரவரி 21, 2025க்கு ஒத்திவைக்கப்பட்டது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web