நோயாளிக்கு ஊசி போட்ட மெடிக்கல் ஷாப் உரிமையாளர் கைது.. கடைக்கும் சீல் வைத்து அதிகாரிகள் அதிரடி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் அசோக் என்பவர் ஐந்து ஆண்டுகளாக மருந்தகம் நடத்தி வருகிறார். இந்த மருந்தகத்தில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு அரசின் முறையான அனுமதியின்றி ஊசி போடப்படுவதாக சுகாதார அதிகாரிகளுக்கு பலமுறை புகார்கள் வந்தன.
இதைத் தொடர்ந்து, புகாரின் பேரில் மருந்தகத்தை ஆய்வு செய்த மாவட்ட மருத்துவ மேற்பார்வையாளர் மற்றும் சுகாதாரத் துறை ஆய்வாளர்கள், வருவாய் ஆய்வாளரின் உதவியுடன், சின்னசேலம் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில், சம்பந்தப்பட்ட மருந்தகத்திற்கு சீல் வைத்தனர். மருந்தகத்தில் பயன்படுத்தப்படும் அதிக வீரியம் கொண்ட மருந்துகளையும் பறிமுதல் செய்தனர்.
இந்த சூழ்நிலையில், மருந்தக உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சின்னசேலம் காவல் நிலைய காவலர்கள் உரிமையாளரைக் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!