புலி சிறுநீரகத்தில் மருத்துவ குணம்.. பாட்டில் போட்டு விற்க தொடங்கிய பூங்கா நிர்வாகம்!

 
புலி சிறுநீர்

சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யான் பிஃபெங்சியா வனவிலங்கு உயிரியல் பூங்காவிற்கு வருகை தந்த ஒருவர், 250 கிராம் எடையுள்ள புலி சிறுநீர் பாட்டில் சுமார் 50 யுவானுக்கு (இந்திய மதிப்பில் ரூ. 56) விற்கப்படுவதாக சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். புலி சிறுநீர் மருத்துவ குணம் கொண்டது என்றும், முடக்கு வாதத்திற்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறினார்.

இந்த சிறுநீரை வெள்ளை ஒயினுடன் கலந்து குடித்தாலோ அல்லது வலி உள்ள பகுதியில் தடவினாலோ வலி நீங்கும் என்றும் அவர் கூறினார். இருப்பினும், அதை உட்கொள்ளும்போது உடலில் ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டால், அதை நிறுத்த வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். புலிகள் சிறுநீர் கழித்த தொட்டியில் இருந்து நேரடியாக சிறுநீர் சேகரிக்கப்படுகிறது என்று விற்பனையாளர்கள் தெரிவித்தனர். அதை விற்க வணிக உரிமம் மற்றும் இயக்க அனுமதி இருப்பதால் அதை விற்க அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இருப்பினும், நாட்டில் உள்ள மருத்துவர்கள் புலி சிறுநீரில் எந்த மருத்துவ குணமும் இல்லை என்று கூறியுள்ளனர். முன்னதாக, இந்தியாவில், ஐஐடி இயக்குனர், பசுவின் கோமியத்தில் மருத்துவ குணம் இருப்பதாகவும், அதை குடிப்பதால் நோய்களை குணப்படுத்த முடியும் என்றும் கூறினார். இதற்கு ஆதரவாக சிலர் குரல் எழுப்பி வருவதும் குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web