ஏலச்சீட்டு நடத்தி மெகா மோசடி.. 250 பேரிடம் ₹5.50 கோடி ஆட்டைய போட்ட கும்பல்!

 
ரூ8,22,000/- மோசடி ! மிளகு கொள்முதல் செய்து ஏமாற்றிய ஜவுளிக்கடை உரிமையாளர் !

விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி 250 பேரிடம் ₹5.50 கோடி மோசடி செய்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தனர். விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகாவை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் அளித்த புகார் மனு: வானூரைச் சேர்ந்த ஞானமணி என்பவர் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியை சேர்ந்த பெண் நடத்திய ஏலத்தில் சேர்ந்தார்.

பின்னர், அவர் மூலம், நாங்களும் ஏலத்தில் சேர்ந்து, அக்டோபர் 2021 முதல் ஒவ்வொரு மாதமும் முறையாக பணம் செலுத்தினோம். இந்த ஏலத்தில் நாங்கள் யாரும் ஏலம் எடுக்காத நிலையில், அந்தப் பெண், அவரது 2 மகன்கள் மற்றும் 2 மருமகள்கள் ஆகியோர் எந்த காரணமும் இல்லாமல், எங்களுக்குத் தெரிவிக்காமல் ஏலத்தை நிறுத்திவிட்டனர். அவர்களிடம் சென்று நாங்கள் செலுத்திய ஏலப் பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டோம், ஆனால் அவர்கள் தர மறுத்துவிட்டனர்.

மோசடி

இவர்கள் 5 பேரும் சேர்ந்து 250 பேரிடம் ₹5.50 கோடி வரை பணம் வசூலித்து திருப்பி தராமல் ஏமாற்றி உள்ளனர். எங்களிடம் ஏலத் தவணையாக வசூலித்த பணத்தைக் கொண்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சொத்துக்களை வாங்கியுள்ளனர். எனவே, ஏலம் நடத்தி ஏமாற்றிய 5 பேர் மீது நடவடிக்கை எடுத்து எங்களுக்கு வரவேண்டிய பணத்தை திரும்ப வழங்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டிருந்தனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web