மனநலம் குன்றிய பெண்ணை கடத்தி கூட்டு பலாத்காரம்.. அதிரவைக்கும் பின்னணி!
அக்டோபர் 11ஆம் தேதி டெல்லி சராய் காலே கான் பகுதியில் பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு வந்தபோது, 3 பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரிடம் தெரிவித்தார்.
ஆனால், கடுமையான உடல்நலக் கோளாறு காரணமாக, போலீஸ் விசாரணைக்கு அவரால் ஒத்துழைக்க முடியவில்லை. இதையடுத்து, குற்றவாளிகளை பிடிக்க மொத்தம் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 700க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதன்படி பிரபு மஹ்தோ, பர்மோத் என்ற பாபு, முகமது ஷம்சுல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களது விசாரணையின் போது, அக்டோபர் 10 ஆம் தேதி, பழைய டெல்லி ரயில் நிலையம் அருகே ஒரு பெண் அமர்ந்திருப்பதை பர்மோத் கவனித்தார். அவர்கள் ஷம்சுல் என்ற மாற்றுத் திறனாளி பிச்சைக்காரனுடன் சதி செய்து, மனநலம் குன்றிய பெண்ணை வலுக்கட்டாயமாக காட்டுப்பகுதிக்கு இழுத்துச் சென்று கூட்டுப் பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவத்தை ஆட்டோ டிரைவர் பிரபு மஹ்தோ நேரில் பார்த்துள்ளார்.
பின்னர் அந்த பெண்ணையும் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், மஹ்தோ பாதிக்கப்பட்டவரை சராய் காலே கான் அருகே இறக்கிவிட்டு தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. பாதிக்கப்பட்ட பெண் ஒடிசாவை சேர்ந்தவர். உயர்கல்வி வரை படித்துள்ளார். மனநலம் குன்றிய அவர், தனது குடும்பத்தினருக்கு தெரிவிக்காமல் மே 9ம் தேதி டெல்லிக்கு பயணம் செய்தார். அவரைத் தேடிய குடும்பத்தினர் ஜூன் 9ஆம் தேதி பூரியில் உள்ள கும்பெர்பாடா காவல்நிலையத்தில் காணவில்லை என்று புகார் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!