ஜோராக நடந்த மெத்தம்பேட்டமைன் விற்பனை.. தலைமறைவாக இருந்த இருவர் அதிரடியாக கைது!

சென்னை ராயப்பேட்டை பகுதியில் மெத்தம்பேட்டமைன் போதைப்பொருள் வழக்கில் தலைமறைவான இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 10.04 கிராம் மெத்தம்பேட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ராயப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான சிறப்பு காவல் குழுவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஜனவரி 3 ஆம் தேதி பீட்டர்ஸ் சாலை, நியூ கல்லூரி அருகே சிறப்பு காவல் குழு கண்காணிப்பை மேற்கொண்டு விருகம்பாக்கத்தைச் சேர்ந்த யாசர் அராபத்தை (27) மெத்தம்பேட்டமைன் வைத்திருந்ததற்காக கைது செய்தது.
அவரிடமிருந்து 2.25 கிராம் எடையுள்ள மெத்தம்பேட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின்படி அவர் காவலில் வைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, மேற்கண்ட யாசர் அராபத் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மேற்கண்ட வழக்கில் தலைமறைவான இரண்டு குற்றவாளிகளான திருவாடானை நைனார் முகமதுவின் மகன் முகமது அரிஸ் மற்றும் நாகூர் அப்துல் காதரின் மகன் ரஷீத் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 10.04 கிராம் மெத்தம்பேட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பிறகு நேற்று (04.02.2025) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி காவலில் வைக்கப்பட்டனர்” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!