மாரத்தான் ஸ்பெஷல் ... நாளை அதிகாலை 3 மணி முதல் மெட்ரோ...!
சென்னையில் நாளை ஜனவரி 5ம் தேதி மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. இதனையடுத்து சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் “ சென்னை மாரத்தான் போட்டியின் 13 வது சீசன் போட்டி ஜனவரி 5 ம் தேதி நாளை நடைபெறவுள்ளது. பிரெஷ் ஒர்க்ஸ் இன்க், தி சென்னை ரன்னர்ஸ் ஆகியவை இணைந்து இந்த மாரத்தான் போட்டியை நடத்த உள்ளன.
இந்த மாரத்தானில் 25000க்கும் அதிகமான ஓட்டப் பந்தய வீரர், "சென்னை ரன்னர்ஸ் சார்பில் 4 பிரிவுகளாக (42.195 கி.மீ, 32.186 கி.மீ, 21.097 கி.மீ, மற்றும் 10 கி.மீ என பிரெஷ் ஒர்க்ஸ் சென்னை மாரத்தான் ஓட்டம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ஜனவரி 5 ம் தேதியன்று காலை 4 மணி முதல் அதாவது நேப்பியர் பாலத்தில் இருந்து இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் வரை 42.195 கி.மீ, ஈ.சி.ஆர், நேப்பியர் பாலத்தில் இருந்து இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் வரை 32.186 கி.மீ, எலியட்ஸ் கடற்கரையில் இருந்து இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் வரை 21.097 கி.மீ, மற்றும் நேப்பியர் பாலத்திலிருந்து சிவானந்தா சாலை வரை 10 கி.மீ வரை நடைபெற உள்ளது. மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் சார்பில் அதிகாலை முதலே ரயில்கள் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் இயக்கப்படவுள்ளன.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், Fresh Works Chennai Marathon உடன் இணைந்து நாளை ஜனவரி 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். அதன் பிறகு ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணையின்படி மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.மாரத்தான் போட்டியில் கலந்து கொள்பவர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட மராத்தான் QR குறியீடு பதியப்பட்ட சிறப்பு பயணசீட்டை பயன்படுத்தி ஜனவரி 5 அன்று மட்டும் தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம். மேலும் வாகன நிறுத்துமிடத்தில் இந்த QR / Bib குறியீட்டை பயன்படுத்தி பங்கேற்பாளர்கள் அன்று மட்டும் தங்களது வாகனங்களை இலவசமாக நிறுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!