இன்றும், நாளையும் மெட்ரோ ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும்!

இன்று ஜனவரி 15ம் தேதி மற்றும் நாளை ஜனவரி 16ம் தேதி சென்னையில் பொதுமக்களின் வசதிக்காக அனைத்து மெட்ரோ ரயில் சேவைகளும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “பொங்கல் பண்டிகை (ஜன.14), மாட்டுப் பொங்கல் (ஜன.15), காணும் பொங்கல் (ஜன.16) ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன.
இந்த நாட்களில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி காலை 5 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை மற்றும் இரவு 8 மணிமுதல் 10 மணிவரை 10 நிமிட இடைவெளியிலும், நண்பகல் 12 மணிமுதல் இரவு 8 மணிவரை 7 நிமிட இடைவெளியிலும், இரவு 10 மணிமுதல் 11 மணிவரை 15 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
ஜன.17-ம் தேதி (வெள்ளி) சனிக்கிழமை அட்டவணைப்படி காலை 5 மணிமுதல் 8 மணிவரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை மற்றும் இரவு 8 மணிமுதல் 10 மணிவரை 7 நிமிட இடைவெளியிலும், இரவு 10 மணிமுதல் 11 மணிவரை 15 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படும். பயணிகளின் தேவை அடிப்படையில் கூடுதல் ரயில் சேவை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!