எம்ஜிஆரின் நெருங்கிய நண்பர்... முன்னாள் அரசவை கவிஞர் புலமைப்பித்தன் மனைவி காலமானார்!

 
தமிழரசி

முன்னால் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பரும், தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் அரசவைக் கவிஞருமான மறைந்த கவிஞர் புலமைப்பித்தனின் மனைவி தமிழரசி (83) கோயம்புத்தூரில் நேற்று முன் தினம் இரவு காலமானார். உடல்நலப் பிரச்னைகளாலும், வயோதிகத்தாலும் பாதிக்கப்பட்டிருந்த தமிழரசி, கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் காலமானார். அவரது இறுதியஞ்சலியும், நல்லடக்கமும் நேற்று மாலை நடைபெற்றது.

புலமைப்பித்தன்

‘நான் யார் நீ யார்’ பாடல் மூலம் சினிமாவில் பிரபலமான புலமைப்பித்தன், எம்.ஜி.ஆர் நடித்த பல படங்களில் ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றிய அவர், எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த காலத்தில் மேலவை உறுப்பினராகவும், துணைத் தலைவராகவும், அரசவைக் கவிஞராகவும் நியமிக்கப்பட்டார். சினிமா, அரசியல் இரண்டிலும் தனித்த முத்திரை பதித்தவர்.

செங்கோட்டையன்

கோபிச்செட்டி பாளையம் சேர்ந்த தமிழரசி, கணவரையும் இரு பிள்ளைகளையும் இழந்து, கோவையில் பேரன் வீட்டில் வாழ்ந்து வந்தார். 2021-ல் புலமைப்பித்தன் மறைந்த நிலையில், தற்போது அவரது மனைவியும் காலமானதால் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!