நல்லகண்ணுவை பாடப்புத்தகத்தில் வைங்க... விஜய் சேதுபதிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் சூசக பதில்!

 
விஜய்சேதுபதி

 
தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்  இரா.நல்லக்கண்ணு. இவரது  நூற்றாண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இந்த விழாவில் தமிழகத்தில் இருக்கும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்த நிகழ்வில், நல்லக்கண்ணு நூற்றாண்டு வாழ்க்கை வரலாற்றை விளக்கக்கூடிய சிறப்பு பாடலும் வெளியிடப்பட்டது.


அந்த சமயத்தில்  மேடையில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “காலில் செருப்பு, தீபாவளி – பொங்கல் போனஸ், 8 மணி நேர வேலை, இதெல்லாம் நல்லகண்ணு போன்றவர்கள் ரத்தம் சிந்தி பெற்றுத் தந்தது. இது பற்றி தெரியாத பலரில் நானும் ஒருவன். இதனால் பலனடைந்த பலர்களிலும் நானும் ஒருவன். இதனால், நல்லக்கண்ணுவின்  வாழ்க்கை வரலாறு பாடப் புத்தகத்தில் இடம்பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் “ நல்லக்கண்ணுவின் வாழ்க்கை வரலாற்றை பாடமாக்குவது குறித்து முதல்வர்  ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும்”  என  தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ விமர்சனம்... இதெல்லாம் தான் படத்தின் ப்ளஸ்-மைனஸ்!
இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், “விடுதலைப் போராட்ட வீரர் போற்றுதலுக்குரிய நல்லகண்ணு அய்யா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் நோக்கில், அவரின் வாழ்க்கை குறிப்பை பாடப்புத்தகத்தில் இணைப்பது குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆலோசனையைப் பெற்று முடிவு செய்யப்படும்.” என பதிவிட்டுள்ளார்.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!! 

From around the web