மினிவேன் மோதி கோர விபத்து... 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!

மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்தில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்றின் மீது மினிவேன் மோதி விபத்திற்குள்ளானதில், சம்பவ இடத்திலேயே 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மகாராஷ்டிராவின் புனே-நாசிக் நெடுஞ்சாலையில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து மீது மினிவேன் மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர். மினிவேன் நாராயண்காவ் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
அப்போது, பின்னால் வந்த டெம்போ அதன் மீது மோதியது. இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.
மினிவேனில் இருந்த 9 பேரும் விபத்தில் சம்ப இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்தவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு, போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!