அமெரிக்கா புறப்பட்டு சென்றார் மநீம தலைவர் கமல்ஹாசன்!
பிரதமர் மோடியைத் தொடர்ந்து மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக நேற்று முன் தினம், சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2-வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன், கட்சியினருக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார். கூட்டத்தில், கமல்ஹாசனை மீண்டும் தலைவராக தேர்வு செய்தது உள்ளிட்டவை தொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றப் பட்டன.
இதைத்தொடர்ந்து அன்று இரவு கமல்ஹாசன் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். கடந்த 2021-ம் ஆண்டு ஹவுஸ் ஆப் கதர் என்ற நிறுவனத்தை கமல்ஹாசன் தொடங்கி இருந்தார். இந்நிறுவனத்தின் விளம்பரம், விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளுக்காக அவர் அமெரிக்கா சென்றிருப்பதாக கட்சி வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!