உத்தரகாண்டில் மிதமான நிலநடுக்கம்

 
உத்தரகாண்டில் மிதமான நிலநடுக்கம்

உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாஷி பகுதியிலிருந்து 23 கி.மீ. தொலைவில் கிழக்கே, 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்திய நேரப்படி இன்று 24-07-2021 அதிகாலை 1.28:41 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் மக்கள் தூக்கத்தில் இருந்து பதறியடித்துக் கொண்டு ஓடினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

From around the web