15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு!

 
மழை
 

 
தமிழகத்தில் உள்பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலை நிலவி வருகிறது. இதனையடுத்து  இன்று 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் என  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

இந்நிலையில் காலை 10 மணி வரை தமிழகத்தில் நீலகிரி, கோவை, மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி  மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வெயில் மழை
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று  வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web