குடை எடுத்திட்டு கிளம்புங்க... அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழை!

 
மழை

 தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில்  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

மழை

இது வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் இன்று முதல் 10ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுயுடன் கூடிய லேசானது  முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்   மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web