சென்னை மக்களே உஷார்... அடுத்த 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை!

 
மழை

 தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் “ தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று செப்டம்பர் 25ம் தேதி  வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும்,  இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை  பெய்யக்கூடும்.  

வெயில் மழை


செப்டம்பர் 26 மற்றும் 27ம் தேதிகளில் தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை  பெய்யக் கூடும்.  
செப்டம்பர் 28 மற்றும் 29 தேதிகளில் தமிழகத்தின் ஒரு சில பகுதிகள்  புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை  பெய்யக் கூடும்.  

மழை

 
 செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1ம் தேதி தமிழகம், புதுவை, காரைக்கால்  பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில  பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமானது வரை மழை   பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web