பத்திரம் மக்களே... இன்றிரவு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவி வருகிறது. இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்திற்கு இன்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவில் நிலைகொண்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நாளை மறுநாள் நெல்லூர் அருகில் சென்று மீண்டும் வட தமிழகத்தை நோக்கி டிசம்பர் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நகர்ந்து வந்து டிசம்பர் 23, 24ம் தேதிகளில் டெல்டா-வட இலங்கை வழியாக உள் மாவட்டங்களை கடந்து அரபிக்கடலுக்கு செல்ல இருக்கிறது. இந்நிகழ்வால், தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்றிரவு சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!