இன்றும் நாளையும் சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

 
மழை கனமழை வெதர்மேன்


தமிழகத்தில் வங்கக்கடலில்  ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது . இந்த  காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக படிப்படியாக வலுவிழக்கும், இதன் தாக்கத்தால் தமிழகம், புதுவையில் அடுத்த 6 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மழை குறித்து சென்னை வெதர்மேன்  வெளியிட்ட பதிவில் ” தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் டிசம்பர் 26 மற்றும் 27ம் தேதி மழை பெய்யும். சென்னையில் கிறிஸ்துமஸ் அன்று மிக அரிதாக கடந்த 25 ஆண்டுகளில் 2001, 2003, 2022 மற்றும் இந்தாண்டு 2024 ஆகிய 4 முறை மட்டுமே மழை பெய்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் இன்றும் நாளையும் மழை பெய்யும். வட கடலோரப் பகுதிகளான புதுவை, கடலூர், விழுப்புரம் பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை

கோவை, ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, நாமக்கல் என உள்மாவட்டங்களிலும் மழை பெய்யும். மழையை ரசியுங்கள். கடைசி சில மழை, அடுத்த 6 மாதங்கள் மழைக்காக ஏங்குவோம். தாமதமான பருவமழையை அனுபவியுங்கள்" என பதிவிட்டுள்ளார்.  

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web