சுற்றுப்பயணத்தை முடித்து இந்தியா புறப்பட்டார் மோடி!
இந்திய பிரதமர் மோடி நைஜீரியா, பிரேசில் மற்றும் கயானா ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப்பயணமாக சென்றிருந்தார். தற்போது தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து தனி விமானத்தில் இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளார். நைஜீரியா, பிரேசில், கயானா நாடுகளுக்கு 5 நாள் பயணமாக பிரதமர் மோடி நவம்பர் 16ம் தேதி புறப்பட்டு சென்றார்.
கடந்த 17 ஆண்டுகளில் நைஜீரியாவுக்கு இந்திய பிரதமர் சென்றது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. நைஜீரியாவில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய தேசிய விருதான 'கிராண்ட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் தி நைஜர் வழங்கப் பட்டது. நைஜீரியா பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி,பிரேசில் சென்றார்.
பிரேசிலில் ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் பிரதமர் மோடி கயானா சென்றார். கயானா நாட்டின் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து ஜார்ஜ் டவுன் நகரில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் மத்தியில் பேசினார். இந்நிலையில், தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, தனி விமானம் மூலம் இந்தியா புறப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!