மோடியின் பாதுகாப்பு படைப்பிரிவு அதிகாரியிடம் பிக்பாக்கெட் அடித்த கொள்ளை கும்பல்!!

இந்திய பிரதமர் மோடிக்கு பல கட்ட பாதுகாப்பு படை பிரிவுகள் உண்டு. இதற்காக பல சிறப்பு குழுக்களும் உண்டு. அந்த வகையில் மோடி சிறப்புப் பாதுகாப்புக் குழுவில் (SPG) பணிபுரிபவர் பெண் அதிகாரி . இவர் மும்பை விலே பார்லே ரயில் நிலையத்தில் இருந்து பிரபாதேவி செல்லும் உள்ளூர் ரயிலில் பிரயாணம் செய்தார். ரயில் குறிப்பிட்ட ப்ளாட்பாரத்தை அடைந்ததும் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக மொபைலில் எஸ்.எம்.எஸ்.வந்தது. அப்போது தான் கவனித்தார். கைப்பையில் பணப்பையும், டெபிட்
 

இந்திய பிரதமர் மோடிக்கு பல கட்ட பாதுகாப்பு படை பிரிவுகள் உண்டு. இதற்காக பல சிறப்பு குழுக்களும் உண்டு. அந்த வகையில் மோடி சிறப்புப் பாதுகாப்புக் குழுவில் (SPG) பணிபுரிபவர் பெண் அதிகாரி .

இவர் மும்பை விலே பார்லே ரயில் நிலையத்தில் இருந்து பிரபாதேவி செல்லும் உள்ளூர் ரயிலில் பிரயாணம் செய்தார். ரயில் குறிப்பிட்ட ப்ளாட்பாரத்தை அடைந்ததும் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக மொபைலில் எஸ்.எம்.எஸ்.வந்தது. அப்போது தான் கவனித்தார். கைப்பையில் பணப்பையும், டெபிட் கார்டும் காணவில்லை. உடனடியாக அந்தேரி அரசு ரயில்வே போலீசில் புகார் செய்தார்.

மோடியின் பாதுகாப்பு படைப்பிரிவு அதிகாரியிடம் பிக்பாக்கெட் அடித்த கொள்ளை கும்பல்!!

தீவிர விசாரணைக்கு பிறகு அவருடைய டெபிட் கார்டுகள் வைத்திருந்த ராணு வீரேந்திர பாண்டே மற்றும் ஹைதர் ஷேக் என இருவர் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் டெபிட் கார்ட் பயன்படுத்தி பணம் எடுத்திருந்தனர்.

பெண் அதிகாரிடம் பணப்பையை திருடி சென்ற சில நிமிடங்களில் டெபிட் கார்டை ஷேக்கிடம் பாண்டே கொடுத்துள்ளார். பின்னர், அதை ஷேக் ஸ்வைப் செய்து, பணத்தைத் திரும்பப் பெற்று, ராணுவிடம் கொடுத்துள்ளார்.

மோடியின் பாதுகாப்பு படைப்பிரிவு அதிகாரியிடம் பிக்பாக்கெட் அடித்த கொள்ளை கும்பல்!!

போலீசார் ஷேக்கை கைது செய்து விசாரித்த போது, அவர், பல்வேறு கொள்ளையர்கள் கொடுத்த 50 க்கும் மேற்பட்ட கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை ஸ்வைப் செய்து பணம் பறித்ததை ஒப்புக் கொண்டனர்.

ரயில் பயணிகளின் பணப்பையை கொள்ளையடிக்கும் கும்பல் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஐபிசி மற்றும் ஐடி சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்தேரி ஜிஆர்பி அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

From around the web