இந்த ராசிக்காரர்களுக்கு பணம் பல வழிகளில் வரும்!!

 
இந்த ராசிக்காரர்களுக்கு பணம் பல வழிகளில் வரும்!!

கார்த்திகை 18, நவம்பர் 4 , 2021, சனிக்கிழமை
திதி: அமாவாசை பகல் 01.13 க்கு பின் வளர்பிறை பிரதமை.
நட்சத்திரம் : அனுஷம் பகல் 10.47 க்கு பின் கேட்டை.
யோகம்: சித்தயோகம்.
சர்வ அமாவாசை.


இராகு காலம்:
காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை
எம கண்டம் :
மதியம் 01.30 மணி முதல் 03.00 மணி வரை
குளிகன் :
காலை 06.00 மணி முதல் 07.30 மணி வரை

இந்த ராசிக்காரர்களுக்கு பணம் பல வழிகளில் வரும்!!


சுப ஹோரைகள்:


காலை 07.00 மணி முதல் 08.00 மணி வரை
பகல் 10.30 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 05.00 மணி முதல் 07.00 மணி வரை
இரவு 09.00 மணி முதல் 10.00 மணி வரை .

நாளைய ராசிபலன்

மேஷம்

இன்று சந்திராஷ்டமம். காலதாமதம் , காரியத் தடை உருவாகலாம். மருத்துவ செலவுகள் ஏற்படலாம். பொறுமையும், நிதானமும் அவசியம். புதிய முயற்சிகள், வீண் வாக்குறுதிகளை தவிர்ப்பது உத்தமம். பணிச்சுமை அதிகரிக்கும்.

ரிஷபம்

இன்று மகிழ்ச்சியான நாள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.பணிச்சுமை குறையும். குடும்பத்தில் அமைதி கூடும். உறவினர்களால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

மிதுனம்

இன்று மந்தமான நாள். கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தொழிலில் புதிய முயற்சிகளில் கடின உழைப்பு தேவை. பொறுமையை கடைப்பிடித்தால் அனுகூலமான பலன்களை பெறலாம்.

கடகம்

இன்று குழப்பமான நாள். உறவினர்களிடம் வீண் வாக்குறுதிகளை தவிர்ப்பது நலம். அலுவலகத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தொழிலில் புதிய முயற்சிகளில் பணிச்சுமை அதிகரிக்கும். இனிய செய்திகள் வந்து சேரும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

இந்த ராசிக்காரர்களுக்கு பணம் பல வழிகளில் வரும்!!

சிம்மம்

இன்று விரயமான நாள். குடும்பத்தில் சச்சரவுகள் அதிகரிக்கும். தொழிலில் புதிய முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். கொடுக்கல் வாங்கல் எதிர்பார்த்த அளவு கிட்டும். இருந்த போதிலும் செலவினங்கள் அதிகரிக்கும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் கிட்டும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும்.

கன்னி

இன்று யோகமான நாள். திடீர் பணவரவு நிச்சயம். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். தொழிலில் போட்டிகள் விலகும்.புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காணலாம். உறவினர்களால் ஆதாயம் கிட்டும். சேமிப்புக்கள் உயரும்.

துலாம்

இன்று சஞ்சலமான நாள். கருத்து வேறுபாடுகள் உருவாகலாம். தொழிலில் கூட்டாளிகளிடம் அனுசரித்து சென்றால் லாபம் நிச்சயம். நிதானத்தை கடைப்பிடித்தால் வீண்பிரச்சனைகளை தவிர்க்கலாம். ஆரோக்கிய குறைபாடுகள் உருவாகும். தெய்வ வழிபாட்டின் மூலம் அனுகூலமான பலன்களை பெறலாம்.

விருச்சிகம்

இன்று சந்தோஷமான நாள். பணம் பல வழிகளில் வந்து சேரும். அலுவலகத்தில் ஆதரவு கூடும். நண்பர்களால் ஆதாயம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். பொன், பொருள் , ஆபரணச் சேர்க்கை நிச்சயம். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வெளியூர் பயணங்களால் உற்சாகம் அதிகரிக்கும்.

தனுசு

இன்று சங்கடமான நாள். தொழிலில் பணவரவு மந்தமாக இருக்கும். உறவினர்களிடையே வீண் வாக்குறுதிகளை தவிர்ப்பது உத்தமம். புதிய முயற்சிகளில் கடின உழைப்பிற்கு பின் லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். கால தாமதம் உருவாகலாம்.

மகரம்

இன்று ஆனந்தமான நாள். சுபகாரியம் கைகூடும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டு. புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காணலாம். குடும்பத்துடன் வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி கூடும். சேமிப்புக்கள் உயரும்.

கும்பம்

இன்று சீரான நாள். ஆரோக்கியம் சிறக்கும். புதிய முயற்சிகளில் ஆதரவு கூடும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் கிட்டும். தெய்வ காரியங்களில் காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

மீனம்

இன்று ஆரோக்கிய குறைபாடு உருவாகலாம். சிக்கனத்தை கடைப்பிடித்தால் பணப்பிரச்சனைகளை தவிர்க்கலாம். அலுவலகத்தில் ஆதரவு கூடும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. நீண்ட முயற்சிக்கு பிறகு எதிர்பார்த்த பலனை அடையலாம். தெய்வ வழிபாட்டின் மூலம் கூடுதல் நன்மைகளை பெறலாம்.

From around the web