PVC பைப்பில் கொட்டிய பண மழை!! வைரலாகும் வீடியோ!!

 
PVC பைப்பில் கொட்டிய பண மழை!! வைரலாகும் வீடியோ!!

கர்நாடகாவில் அரசு அதிகாரிகளின் வீடுகளில் ஒரே நேரத்தில் 68 க்கும் மேற்பட்ட இடங்களில் ஊழல் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் கோடிக்கணக்கான பணம், அசையும் மற்றும் அசையா சொத்துகளின் பத்திரங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

இந்த சோதனை அரசு அதிகாரிகளின் மட்டுமல்ல அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் இடம் என பல மாவட்டங்களில் நடத்தப்பட்டது.
விவசாயம், கூட்டுறவு, பெங்களூரு ஸ்மார்ட் சிட்டி, பொதுப்பணித்துறை, பத்திரப் பதிவுத்துறை, வட்டார வளர்ச்சித் துறை அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடைபெற்றுள்ளது.

PVC பைப்பில் கொட்டிய பண மழை!! வைரலாகும் வீடியோ!!

இன்னும் சோதனைகள் முடிவடையாததால் எவ்வளவு மதிப்பிலான ரூபாய் மற்றும் சொத்துகள் கைப்பற்றப்பட்டுள்ளது என்பது குறித்து தகவல்கள் வெளியிடவில்லை.
இந்நிலையில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் வீட்டில் PVC பைப்புக்குள் இருந்து கட்டுக் கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் எடுத்துள்ளனர் இந்த வீடியோபதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பைப்பிற்குள் மட்டும் சுமார் 13 லட்ச ரூபாய் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

From around the web