போர்நிறுத்தத்தின் நடுவே மீண்டும் தாக்குதல் ... 46 குழந்தைகள் உட்பட 104 பேர் பாலஸ்தீனியர்கள் பலி!

 
இஸ்ரேல்

 

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு 2023 அக்டோபரில் நடத்திய கொடூர தாக்குதலில் பல இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்டனர்; சிலர் பணய கைதிகளாக பிடிக்கப்பெற்றனர். இதற்கு பதிலாக, காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் பலியாகினர். பின்னர் அமெரிக்கா தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையால் போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இதனால் காசா மக்கள் வீடு திரும்பி மகிழ்ச்சியில் கொண்டாடினர்.

இஸ்ரேல்-ஹமாஸ்

ஆனால் போர்நிறுத்தத்தின் நடுவே மீண்டும் பதற்றம் வெடித்துள்ளது. இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவரை ஹமாஸ் படுகொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட 104 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்; மேலும் 253 பேர் காயமடைந்ததாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன. குடியிருப்புகள், வீடுகள், நிவாரண மையங்கள் உள்ளிட்ட பல இடங்கள் சேதமடைந்தன.

இஸ்ரேல் ஹமாஸ்

தாக்குதல்கள் காரணமாக காசா மக்களிடையே மீண்டும் அச்சம் பரவியுள்ளது. மருத்துவமனைகளில் மருந்து பொருட்கள் பற்றாக்குறை நிலவுவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. கடந்த 10-ந்தேதி போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டபோதும், அதன்பிறகு நடந்த தாக்குதல்களில் 211 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 68 ஆயிரத்தைக் கடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!