இஸ்ரேல் தாக்குதல் .. ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் பலி!

 
ஹசன்

 இஸ்ரேல் பாலஸ்தீனப் போர் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் நடந்து வருகிறது. இந்த போர் தொடங்கிய பிறகு இரு நாடுகளிலும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.  இந்த போரில் ஹமாசுக்கு ஆதரவாக களம் இறங்கிய லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் நாட்டின் மீது ராக்கெட் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்த தொடங்கினர். இஸ்ரேல் அதற்கு பதிலடியாக லெபனான் மீது  வான்வழி தாக்குதல்களை தொடுத்தது.

இஸ்ரேல்

இஸ்ரேல் கடந்த 4 நாட்களாக லெபனான் மீது பயங்கரமான முறையில் வான்வழி தாக்குதலை தொடுத்து வருகிறது. இதில் மக்கள் கொத்து, கொத்தாக பலியாகி வருகின்றனர்.  இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் ஒரே வாரத்தில் லெபனானில் 700 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.  இந்நிலையில் செப்டம்பர் 27ம் தேதி நேற்று வெள்ளிக்கிழமை லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு பகுதியில் உள்ள தாஹியே பகுதியில் அமைந்துள்ள ஹிஸ்புல்லா தலைமை அலுவலகம் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்பு கட்டடங்கள் மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியது.

ஹசன்

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் 64 வயது ஹசன் நஸ்ரல்லா ஆகியோரை  குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.  இந்த வான்வழித் தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. நேற்று  செப்டம்பர் 27ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு முதல் நஸ்ரல்லா காணாமல் போன நிலையில் ஹிஸ்புல்லா தரப்பில் இருந்து இதுவரை குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் இஸ்ரேல் லெபனான் மீது நடத்திய தாக்குதலில் தற்போது ஹிஸ்புல்லா அமைப்பின் ட்ரோன் படைப்பிரிவு தலைவர் ஹூசைன் சிரோர் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது.  லெபனான் தலைநகர் பெய்ரூட் பகுதியில்  1000 கிலோ எடை கொண்ட பதுங்குழி குழி குண்டுகளை வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் ட்ரோன் படை பிரிவு தலைவர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன்  4 அடுக்குமாடி குடியிருப்புகள் தாக்குதலில் தரைமட்டமான நிலையில் இந்த தாக்குதலின் மூலம் இதுவரை 1000க்கும்  மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web