எவரெஸ்ட் பனிப்புயலில் 1000க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவிப்பு!

 
எவரெஸ்ட்
 


எவரெஸ்டின் கிழக்கு மலைப்பகுதியில் திடீரென ஏற்பட்ட  பனிப்புயல் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்குச் சிக்கியிருப்பதாக அதிர்ச்சி தரும்  தகவல்கள் வெளியாகியுள்ளன.  உலகின் மிகவும் உயரமான மலைப்பகுதியான எவரெஸ்ட்  நேபாளம், சீனா எல்லையில் இந்த சிகரம் அமைந்துள்ளது. இரு நாடுகளிலிருந்தும் இந்த மலைச்சிகரத்துக்கு வீரர்கள் மலையேறுவது வழக்கம். 

சீனாவில் தற்போது 8 நாள் தேசிய தின விடுமுறையையொட்டி, ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மலையேறி அங்கு முகாமிட்டுத் தங்கியுள்ளனர். இந்நிலையில் , எவரெஸ்ட் சிகரத்தின் கிழக்கே அமைந்துள்ள சீனாவின் திபெத் பிராந்தியத்தில் கடும் பனிப்புயல் ஏற்பட்டுள்ளது. இங்கு  தங்கியிருந்த 1000-க்கும் மேற்பட்ட வீரர்கள் சிக்கியுள்ளனர். அவர்களில் முதற்கட்டமாக 300-க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.  உள்ளூர் மக்கள் மற்றும் மீட்புக் குழு உறுப்பினர்கள் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  4,900 மீட்டர் உயரத்தில் படர்ந்துள்ள பனியை அகற்றி பாதைகளைச் சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  

இதனையடுத்து திபெத்தில் உள்ள டிங்ரி சுற்றுலா குழு எவரெஸ்ட் சிகரத்தைப் பார்வையிடுவதற்கான டிக்கெட் விற்பனையை நிறுத்தியுள்ளது. எவரெஸ்டின் நேபாளப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவால் மலையேற்றப் பாதைகள் தடைப்பட்டுள்ளன.   மலையேற்றப் பயணிகள் எச்சரிக்கையாக இருக்கவும், பிரதான பாதையிலிருந்து 200-300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மாற்று பாதையைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது. நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளனர். நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக எவரெஸ்ட் பகுதியில் வழக்கத்திற்கு மாறாகக் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இது மலையேற்றத்தில் ஈடுபட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு மிகுந்த சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?