மது குடிக்க பணம் கொடுக்க மறுத்த தாய்.. கோபத்தில் மின்கம்பத்தில் ஏறி படுத்துக்கொண்ட இளைஞர்!

 
ஆந்திரா இளைஞர்

ஆந்திராவில் மது குடிக்க பணம் தர மறுத்த தாயை பயமுறுத்துவதற்காக மகன் மின்கம்பத்தில் ஏறியுள்ளார். மன்யம் மாவட்டம் பார்வதிபுரம் நகரில் உள்ள சிங்கிபுரம் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மது அருந்துவதற்காக ஓய்வூதியத் தொகையைக் கேட்டு தனது தாயிடம் மகன் சண்டை போட்டுள்ளார்.


ஆனால், பணத்தை கொடுக்க தாய் மறுத்ததால், அந்த வாலிபர் அவரை பயமுறுத்துவதற்காக மின்கம்பத்தில் ஏறி மின்வயரில் படுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் உடனடியாக மின்சாரத்தை நிறுத்தி அவரது உயிரை காப்பாற்றினர். பின்னர், சிறிது நேரம் கழித்து, அவரே கீழே வந்தார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web