டிஜே ஸ்பீக்கர் வாங்க பணம் தர மறுத்த தாய்.. ஆத்திரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து மகன் போட்ட பிளாண்!
உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் டிஜே ஸ்பீக்கர் வாங்க தாய் பணம் தர மறுத்ததால் தாயை மகன் செங்கல்லால் தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் கேம் மோகம், சூதாட்டத்தால் பணத்தை இழந்து தற்கொலை, ஆடம்பர வாழ்க்கை வாழ தவறான வழியில் பணம் சேர்க்க முயல்வது என பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நாடு முழுவதும் தினமும் அரங்கேறி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
थाना ट्रोनिका सिटी पुलिस द्वारा हत्या की घटना का सफल अनावरण, घटना कारित करने वाले मृतका के बेटे सहित 03 अभियुक्त गिरफ्तार, कब्जे से हत्या में प्रयुक्त ईंट व मोटरसाइकिल बरामद ।@Uppolice pic.twitter.com/bTfJdKzAPZ
— POLICE COMMISSIONERATE GHAZIABAD (@ghaziabadpolice) October 24, 2024
குறிப்பாக பண ஆசை மனிதர்களை மனிதாபிமானம் இல்லாத மிருகங்களாக மாற்றும் அளவிற்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த வகையில் உத்தரபிரதேசத்தில் ஒரு சம்பவம் குழந்தைகளின் உளவியலில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.அக்டோபர் 4, 2024 அன்று உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள ட்ரோனிகா சிட்டியில், சுனில் குமார் என்ற நபர், தனது மனைவி சங்கீதாவை அடையாளம் தெரியாத ஆசாமிகளால் படுகொலை செய்ததாக காவல்துறையில் புகார் அளித்தார்.
இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து, அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, திடுக்கிடும் காட்சிகள் கிடைத்துள்ளன.அதன்படி, சங்கீதாவை கொலை செய்தது வேறு யாருமல்ல, அவரது சொந்த மகன் சுதிர்தான் என தெரிய வந்துள்ளது. சுதிர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து மகன் சுதிரை பிடித்து விசாரித்ததில் கொலைக்கான காரணத்தை தெரிவித்தார்.
அதன்படி, புதிய டிஜே ஸ்பீக்கர் வாங்கவும், செலவுக்காகவும் சுதிர் தனது தாய் சங்கீதாவிடம் ரூ.20,000 கேட்டுள்ளார். ஆனால், பணம் தர மறுத்த சங்கீதா, குடும்பச் சொத்தை சுதிரின் மூத்த சகோதரி பெயரில் மாற்றத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியதால், சுதிர் விரக்தியடைந்துள்ளார். இதை அவமானமாக எண்ணிய சுதிர், இதுபற்றி தனது நண்பர்களிடம் தெரிவிக்க, அனைவரும் தாய் சங்கீதாவை கொல்ல திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக அக்டோபர் 3ம் தேதி சுதிர் தனது தாயை பணியிடத்தில் இருந்து அழைத்துக்கொண்டு தனிமையான இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு தனது இரு நண்பர்களை அழைத்துள்ளார். இதையடுத்து, சங்கீதா செங்கற்களால் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்த அறிக்கையின் அடிப்படையில், அக்டோபர் 23 அன்று, சுதிர், அவரது மூன்று நண்பர்கள் சச்சின் தியாகி மற்றும் குர்தா என்ற அங்கித் ஆகியோரை போலீசார் கைது செய்தனர், மேலும் சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிளை கண்டுபிடித்தனர். பணத்துக்காக தாயை மகன் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!